இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அட்சதை

  திருமணத்தில் வாழ்த்தியவர்கள் விடைபெற்ற பின்பும் ஆசிர்வதித்துக்கொண்டே இருக்கிறது மணமக்கள் தலையில் தங்கிய அட்சதை. - காசாவயல் கண்ணன்

உருகும் சாலை

  கொளுத்தும் வெய்யிலில் நெடுஞ்சாங்கிடையாக வெகுநேரம் விழுந்து கிடந்து இடைவிடாது  வாகனங்கள் முதுகில் ஏறி இறங்கிய அலுக்கை தீர  அனுபவித்துக் கிடக்கிறது குறுக்கும் நெடுக்குமாக நடந்து செல்லும்  குழந்தையின்  பிஞ்சுக் காலடித் தடம் பட்ட  நெடுஞ்சாலை. காசாவயல் கண்ணன்