உருகும் சாலை
கொளுத்தும் வெய்யிலில்
நெடுஞ்சாங்கிடையாக
வெகுநேரம் விழுந்து கிடந்து
இடைவிடாது வாகனங்கள்
முதுகில் ஏறி இறங்கிய
அலுக்கை தீர
அனுபவித்துக் கிடக்கிறது
குறுக்கும் நெடுக்குமாக
நடந்து செல்லும்
குழந்தையின்
பிஞ்சுக் காலடித் தடம் பட்ட
நெடுஞ்சாலை.
காசாவயல் கண்ணன்
கருத்துகள்
கருத்துரையிடுக